கொடைக்கானலில் உறை பனி - சுற்றுலா பயணிகள் அவதி

 
tn

கொடைக்கானலில் வழக்கமாக டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை உறை பனி காலமாக இருக்கும். இந்த முறை நவம்பர் மாதத்திலேயே உறை பனி தொடங்கிவிட்டது.  பகல் நேரத்திலும் கூட 15 டிகிரி முதல் 18 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும்,  இரவில் 7 டிகிரி முதல் 10 டிகிரி செல்சியசுக்கு குறைவான வெப்பநிலையும் காணப்படுகிறது.  இதன் காரணமாக மக்கள் கடும் பணியில் அவதிப்பட்டு வருகின்றனர்.

tn

 குறிப்பாக கடந்த இரண்டு நாட்களாக வெப்பநிலை வெகுவாக குறைந்து கடும் உறை பனி ஏற்பட்டுள்ளது.  இதனால் புல்வெளிகள் வெண்மையாக பனி படர்ந்து  உறைந்து காணப்படுகின்றன.  கடுமையான குளிர் காரணமாக சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.   பிற்பகல் 3 மணி வரை இதமான வெயில் அடிக்கும் நிலையில் அதன் பிறகு நடுங்கும் குளிர்  அனைவரையும் உறைய வைக்கிறது. இதனால் பொதுமக்கள்,  சுற்றுலா பயணிகள் தீ மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர்.