பெண் ஊழியருக்கு பாலியல் சீண்டல்... கோயில் செயல் அலுவலர் மீது பகீர் புகார்

 
temple worker

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் அலுவலக பெண் ஊழியரிடம் கோயில் செயல் அலுவலர் பாண்டியல் சீண்டலிடம் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.

கோவிலில் பெண் ஊழியருக்கு பாலியல் சீண்டல் கோவில் செயல் அலுவலர் மீது பகீர் புகார்... - காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் பரபரப்பு...

உலக பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர் திருக்கோயில் பெரிய காஞ்சிபுரம் பகுதியில் அமைந்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இத்திரு கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருக்கோயிலைக் கண்டு தரிசிப்பது வழக்கம். கோவில் வளாகத்தில் செயல் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. கடந்த எட்டாம் தேதி திருக்கோயிலின் செயல் அலுவலராக பணிபுரிந்து வரும் வேதமூர்த்தி, செயல் அலுவலகத்தில் திருக்கோயில் பெண் ஊழியரிடம் முறைகேடாக நடக்க முயற்சித்ததாகவும், அநாகரிகமாக செயல்பட்டதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தன்னிடம் தகாத முறையில் நடந்துகொண்ட வேதமூர்த்தியை, அந்த பெண் ஊழியர் அடித்ததாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் கோவில் ஊழியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருக்கோயில் வளாகத்தில் செயல் அலுவலகத்தில் இது போன்ற செயலில் ஈடுபட்ட செயல் அலுவலரினை செயலை இந்து சமய அறநிலைத்துறை நிர்வாகம் கண்டிக்க வேண்டும் எனவும், இது போன்ற மனநிலை உடைய நபர்களுக்கு பணி வழங்கக் கூடாது எனவும் கோரிக்கை எழுந்துள்ளது. இச்செயல் குறித்த வீடியோ பதிவும் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. மேலும் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் செயல் அலுவலர், ஊழியர்களிடம், இணை ஆணையர் வான்மதி விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.


 

இந்த செயல் அலுவலர் ஏற்கனவே செங்கல்பட்டு மாவட்டத்தில் பணிபுரிந்த போது இதே போன்று சர்ச்சையில் சிக்கியுள்ளார். மேலும் இவர் பணிபுரியும் திருக்கோயில்களில் எப்போதுமே இவர் மீது அதிக அளவில் குற்றம் சாட்டப்படுவது வழக்கமாக உள்ளது.