3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை- மாற்றத்திறனாளிக்கு ஐந்து ஆண்டுகள் சிறை

 
s

மூணு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மாற்றுத்திறனாளி வாலிபருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு தாலுகாவில் உள்ள மரிய நல்லூர் கிராமம்.   இக்கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி புண்ணியகோடி. இவர் அப்பகுதியில் உள்ள 3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.   கடந்த 2016 ஆம் ஆண்டில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது . 

pu

சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில் செய்யாறு அனைத்து மகளிர் போலீசார் புண்ணியகோடி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.   இது குறித்த வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்து வந்துள்ளது. 

 வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்து வந்துள்ளது.   இந்த வழக்கின் விசாரணைகள் முடிவடைந்து தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
புண்ணிய கோடிக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார் நீதிபதி.    இதை அடுத்து அவரை வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர் போலீசார்.