கஞ்சாவை ஒழிக்க இது போதாது.. இன்னும் தீவிரம் வேணும் - ராமதாஸ் வலியுறுத்தல்...

 
ramadoss

காவல்துறையின்  கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை எனவும்,  தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.  

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதமாக, காவல்துறையினர் நடத்திய 2.0  கஞ்சா ஒழிப்பு சோதனையில் 2,423 கஞ்சா வணிகர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 3,562 கிலோ கஞ்சாவும், 6,319 குட்கா வணிகர்கள் கைது செய்யப்பட்டு 44.90 டன் குட்காவும் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் காவல்துறை களமிறங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், இந்த நடவடிக்கை போதுமானது அல்ல. ஆண்ட்கல்விக்கும், தொன்மைக்கும் புகழ் பெற்ற தமிழ்நாடு இப்போது கஞ்சா, அபின் உள்ளிட்ட போதைப் பொருட்களின் புகலிடமாக மாறியிருக்கிறது.

Serious action is needed to eradicate drugs

ஆந்திரத்திலிருந்து வரும் தொடர்வண்டிகளில் பயணிகள் எண்ணிக்கையை விட கஞ்சா பொட்டலங்கள் தான் அதிகமாக வருகின்றன. சென்னையில் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட இடங்களில் திண்பண்டங்களை விட மிகவும் எளிதாக கஞ்சா கிடைக்கிறது. கஞ்சா மட்டுமின்றி, அபின், போதை மாத்திரைகள், கேட்டமைன், எல்.எஸ்.டி (Lysergic Acid Diethylamide -LSD), டைடோல் 50 (Tydol 50), நைட்ரோவிட் (Nitravet 10) போன்ற காவல்துறையால் யூகிக்க முடியாத போதை மருந்துகள் கூட சென்னை மற்றும் தமிழகத்தின்  மூலை முடுக்குகளில் கூட கிடைக்கின்றன.   தமிழகத்தின் இளைஞர்களும், மாணவர்களும் கெட்டு, சீரழிவதற்கு இவை தான் முதன்மை காரணங்களாக உள்ளன.

Serious action is needed to eradicate drugs

போதைக்காக  இளைஞர்களும், பல நேரங்களில் சிறுவர்களும் திருட்டு, வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர்.  திருட்டு, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட சிறார்களிடம் நடத்திய விசாரணையில் 87% பேர் மது, போதைப் பொருட்களைப் பயன்படுத்தும் பழக்கம் உடையவர்கள் என்று சிறார் குற்றவாளிகள் குறித்த ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.  தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகரித்திருப்பதற்கு காரணம் காவல்துறையின் தோல்வி தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Serious action is needed to eradicate drugs

  டிசம்பர் 6-ஆம் தேதி முதல் ஜனவரி 6-ஆம் தேதி வரை நடத்திய முதல் சோதனையில்  8,929 பேர் கைது செய்யப்பட்டனர். அதன்பின் 3 மாதங்கள் கழித்து கடந்த மார்ச் 28-ஆம் தேதி முதல் ஏப்ரல் 27-ஆம் தேதி வரை  நடத்தப்பட்ட காவல்துறை சோதனையில் ஒட்டுமொத்தமாக 8,742 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இன்னும் 3 மாதங்கள் கழித்து மூன்றாவது கட்ட கஞ்சா ஒழிப்பு சோதனை நடத்தப்பட்டாலும் இவர்கள் மீண்டும் கைது செய்யப்படுவர்.  ஆனால், இது சாத்தியமாகாததற்கு கஞ்சா வணிகத்திற்கு காவல்துறையில் உள்ள சில ஆதரவளிப்பது தான் காரணம் ஆகும்.  ஆனால், காவல்துறையினர் நினைத்தால் அதிகபட்சமாக மூன்றே நாட்களில் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழிக்க முடியும்.

Serious action is needed to eradicate drugs

காவல்துறையில் உள்ள கஞ்சா வணிகர்களுக்கு ஆதரவான கருப்பாடுகள் களையெடுக்கப்பட வேண்டும். கஞ்சா, குட்கா போன்றவை எங்கிருந்து தமிழ்நாட்டிற்கு வருகிறது என்பதை கண்டறிந்து, மூலத்திலேயே அவற்றை அழிக்க வேண்டும். இதற்காக  காவல் துறையில் தனிப்பிரிவு ஏற்படுத்துவது, போதைப் பொருள் வணிகர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்வது, திடீர் சோதனைகளை அதிகரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை காவல்துறை எடுக்க வேண்டும். அதன் மூலம் கஞ்சா, குட்கா, போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும்."  என்று குறிப்பிட்டுள்ளார்.