"பதவிக்காக மனசாட்சியற்று பேசுகிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி" - பாஜக விமர்சனம்

 
bjp

 முதலமைச்சர் ஸ்டாலின் கோவை கார்குண்டுவெடிப்பின் தீவிரத்தை மக்களுக்கு வெளிப்படையாக அறிவிக்காமல் சிலிண்டர் வெடிப்பு என்று பூசிமுழுகுவது ஏன்? என்று பாஜக விவசாய அணி கேள்வி எழுப்பியுள்ளது. 

இதுகுறித்து தமிழக பாஜக விவசாய அணி தலைவர் நாகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை கார்குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து பேசிய செந்தில்பாலாஜி கோவை மாநகரில் பாஜக கடையடைப்பு அறிவித்ததுடன் பத்திரிக்கைக்கு தீடிரென்று பேட்டியளிக்கிறார்.கோவை கார்குண்டு வெடிப்பின் தீவிரத்தை உணராமல் சப்பைக்கட்டு கட்டுகிறார்.

senthil

கோவை மாநகரில் பாஜக அலுவலகம் மீதும்,நிர்வாகிகள் வீடுகளின்மீதும்  பாட்டில்குண்டு வீசியபோதே  திமுக அரசை எச்சரித்து சாலை மறியலில் அமர்ந்தோம்.ஆனால் பாஜகவினர் மீது வழக்குபோடுவதில் காட்டிய ஆர்வத்தை பயங்கரவாதிகள் மீது காட்டியிருந்தால் இதுபோன்ற குண்டுவெடிப்பு சம்பவம் நடந்திருக்காது.தான் பொறுப்பாளராகவுள்ள கோவை மாநகரில் கடையடைப்பு நடந்தால் தன் பதவிக்கும்,புகழுக்கும் பங்கம் வந்துவிடுமோ என்ற பயத்தில் கோவையின் நலனில் அக்கறையில்லாமல் பேசுகிறார் அமைச்சர்.

க்க்

Ø  கரூரைச் சேர்ந்தவர் கோவையின் தீவிரவாத அரசியல்  புரியாமல் பேசுகிறார்.

Ø  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்த எந்த குற்றச்சாட்டிற்கும் பதில் சொல்லாமல் விசாரணை கேட்டவரையே விசாரிக்க வேண்டுமென்று உளறுகிறார்.  

bjp

Ø  இதுவரை முதலமைச்சர் ஸ்டாலின் கோவை கார்குண்டுவெடிப்பின் தீவிரத்தை மக்களுக்கு வெளிப்படையாக அறிவிக்காமல் சிலிண்டர் வெடிப்பு என்று பூசிமுழுகுவது ஏன்?

Ø  மொத்தத்தில் செந்தில்பாலாஜி என்ற அமைச்சர் வசூல்அரசியல் செய்து வாக்குவங்கிக்காக பல பொய்களைப்பேசி பதவியை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு அமைச்சராக உலாவருவதற்கு கோவை மக்களின் நலன் பற்றி கவலைப்படாமல் மனசாட்சியற்று பேசுகிறார்" என்று குறிப்பிட்டுள்ளார்.