பரபரப்பு தீர்ப்பு! கச்சநத்தம் படுகொலைகள் வழக்கில் 27 பேருக்கு ஆயுள் தண்டனை

 
c

கச்சநத்தம்  படுகொலைகள் வழக்கில் 27 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியிருக்கிறது சிவகங்கை நீதிமன்றம். 

 சிவகங்கை மாவட்டத்தில் திருப்பாச்சேத்தி அடுத்த கச்சநத்தம் கிராமம்.   இக்கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம், சண்முகநாதன், சந்திரசேகர் ஆகிய மூன்று பேரும் கடந்த 2018 ஆம் ஆண்டில் மே மாதம் 28ஆம் தேதி அன்று இரவு படுகொலை செய்யப்பட்டார்கள். 

k

 கோவில் திருவிழாவில் மரியாதை அளிப்பது தொடர்பாக ஏற்பட்ட முன் விரோதத்தினால் வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இந்த மூன்று பேரையும் வெட்டி கொலை செய்தார்கள்.  இந்த படுகொலைகள் சம்பவத்தில் மேலும் 5 பேர் காயம் அடைந்தார்கள்.   காயமடைந்தவர்களில் தனசேகரன் என்பவர் சம்பவம் நடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்னர் உயிரிழந்தார்.

 இந்த படுகொலைகள் வழக்கில் ஆவரங்காடு கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார் ,சுமன், ராஜேஷ், அக்னி ராஜ் ,சந்திரகுமார் உள்ளிட்ட 33 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது .  இவர்களில் இரண்டு பேர் வழக்கு விசாரணையின் போது உயிரிழந்துவிட்டனர்.  மூன்று பேர் சிறுவர்களாக உள்ளனர்.  ஒருவர் தலைமுறை வாங்கிவிட்டார் .  இதையடுத்து மீதமுள்ள  27 பேர் மீதும்  சிவகங்கை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இருக்கும் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது.   இந்த வழக்கில் விசாரணைகள் முடிவடைந்து குற்றம் உறுதியானதை அடுத்து 27 பேரும் குற்றவாளிகள் என்று கடந்த 1ம் தேதி அன்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ka

 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்று நீதிபதி ஒத்தி வைத்திருந்தார்.   இந்த நிலையில் கச்சநத்தம் படுகொலைகள் வழக்கில் குற்றவாளிகள் 27 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பளித்துள்ளார் நீதிபதி முத்துக்குமரன்.