அரசுக்கு எப்படி ரூ.6.50 கோடி கடன் வந்தது? வெள்ளை அறிக்கை வேண்டும்- சீமான்

 
seeman

தமிழ்நாட்டுக்கு ரூ.6,50,000 கோடி கடன் வந்தது எப்படி? என அரசு வெள்ளை அறிக்கை தர வேண்டும் என சீமான் வலியுறுத்தியுளார்.

Image

கொரோனா பெருந்தொற்று பேரிடர் காலத்தில் பணியமர்த்தப்பட்ட 2472 செவிலியர்களை பணிநீக்கம் செய்யும் அரசாணையைத் திரும்பப் பெறக்கோரி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அவர்களை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் நேரில் சந்தித்து தனது ஆறுதலை தெரிவித்தார். 

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “அன்னை தெரசா விட்டுச்சென்ற பணியை அன்றாடம் செய்து கொண்டு இருப்பவர்கள் செவிலியர்கள். கொரானா நோய்த்தோற்று காலத்தில் முழு அர்ப்பணிப்போடு பணி செய்தார்கள். கொரானா நோய்த் தொற்றால் இறந்துபோன மருத்துவர்கள் செவிலியர்கள் அதிகம். செவிலியர்கள் எல்லாம் கொரோனா காலக்கட்டத்தில் தேவதைகளை போல தெரிந்தார்கள். நிரந்தர பணி நியமனம் என்று வாக்குறுதியை கொடுத்தவர் இன்று வஞ்சகமும் ஏமாற்றத்தையும் கொடுத்திருக்கிறார். 

மக்களுக்காக சேவைசெய்பவர்கள் வீதியில் நின்று போராடுவது கொடுமை. ஆங்கிலபுத்தாண்டு அன்று செய்த தவறை தமிழ்புத்தாண்டு அன்று சரி செய்யுங்கள். பணிநீக்கம் செய்யப்பட்ட அனைவருக்கும் பணியை உறுதி செய்யுங்கள். இதை சரிசெய்யுங்கள் இந்தியாவில் நம்பர் 1 நாங்களும் சொல்கிறோம்.  கொரோனா காலத்தில் சேவையாற்றிய செவிலியர்கள் வீதியில் வந்து போராடுகிறார்கள். ஒப்பந்த செவிலியர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும், செவிலியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற அரசிடம் நிதி இல்லை? தமிழ்நாட்டுக்கு ரூ.6,50,000 கோடி கடன் வந்தது எப்படி? என அரசு வெள்ளை அறிக்கை தர வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.