தருமபுர ஆதினத்தை பல்லக்கில் தூக்குவது சரியானது அல்ல - சீமான்

 
seeman

தமிழக வணிகர்கள் சங்கங்களின் பாதுகாப்பு பேரவையின் மே 5-ந்தேதி 39 வது வணிகர் தின மாநாடு.  செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த கூவத்தூர் கோல்டன் பே தனியார் விடுதியில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருச்சி வேலுசாமி ,மார்க்கிஸ்ட் கம்யுனிஸ்ட் மூத்த தலைவர் ரங்கராஜன் , நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Seeman's aggressive Tamil nationalism touches a chord, winning more votes  than Kamal Haasan and AMMK

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “தர்மபுர ஆதினத்தை பல்லக்கில் தூக்குவது தற்போது சரியானது அல்ல . நவீன இயந்திரங்கள் வந்த பிறகு பல்லக்கில் வைத்து தூக்குவது,மனிதனை மனிதன் சுமப்பது தவறு அதை ஏற்கமுடியாது , அதே பல்லக்கை வாகனத்தில் வைத்து எடுத்து செல்லலாம். மேலும் அரசு அவர்களுக்கு முறையாக எடுத்து கூறலாம். ஆசிரியர்களிடம் மாணவர்கள் தவறான முறையில் நடந்து கொள்வது குறித்து கேட்டபோது இது மிகவும் கண்டிக்கத்தக்கது. 

பெற்றோர் பத்துமாதம் தான் கருவில் சுமக்கிறார்கள். ஆசிரியர்கள் பத்து முதல் பன்னிரண்டு ஆண்டுகள் அறிவு கருவறையில் சுமப்பவர்கள், அவர்களுக்கு உரிய மரியாதையை அளிக்கவேண்டும். உடனடியாக அரசு நடவடிக்கை எடுத்து ஆசிரியர்களுக்கு உரியா பாதுகாப்பை வழங்கவேண்டும். பேரறிவாளன் விடுதலை குறித்த அரசியல் நாடகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.” எனக் கூறினார்.