நேரு உள்விளையாட்டு அரங்கில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் தற்கொலை!!

 
suicide

சென்னை நேரு ஸ்டேடியத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

death

கடந்த 28ஆம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில்  செஸ் ஒலிம்பியாட் போட்டி 2022 தொடக்கவிழா கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அத்துடன் வெளிநாட்டிலிருந்து தமிழகம் வருகை புரிந்த செஸ் வீரர்கள், வீராங்கனைகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான நபர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர். பிரதமரின் வருகையையொட்டி 4ஆயிரத்திற்கும் அதிகமான காவல்துறையினர் நேரு உள்விளையாட்டு அரங்கில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Death

இந்நிலையில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். மதுரையைச் சேர்ந்த ஆயுதப்படை காவலர் செந்தில்குமார் நேரு ஸ்டேடியத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  குடும்பத் தகராறு காரணமாக ஆயுதப்படை காவலர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றன. செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 10ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. செஸ் ஒலிம்பியாட்டின்  இறுதி நிகழ்ச்சிக்காக அரங்கில் ஏற்பாடு நடைபெற்று வரும் நிலையில், பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் தன்னை தானே சுட்டுக் கொண்டு தற்கொலை கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.