கல்லூரி மாணவிக்கு ஆபாச வீடியோ அனுப்பிய செக்யூரிட்டி

 
செக்யூரிட்டி

வேலியே பயிரை மேய முற்பட்ட பழமொழி போல் விடுதி காவலாளியே மாணவியின் செல்போனுக்கு ஆபாச வீடியோ அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ஆபாச வீடியோ பதிவிறக்கம் : திருச்சியில் 2 பேர் கைது | Dinamalar Tamil News

சென்னை கேளம்பாக்கம் அடுத்த படூரில் உள்ள இந்துஸ்தான் கல்லூரியில் மாணவிகள் தங்கும் விடுதியில் காவலாளியாக பணி செய்பவர் திருநெல்வேலியை சேர்ந்த பாலசுப்பிரமணி(42). திரிலோச்சன செக்கியூரிட்டி சர்வீஸ் நிறுவனம் மூலம் பணியார்த்தப்பட்ட இவர், பெண்கள் விடுதியில் தங்கியுள்ள மாணவிகளின் செல்போன் எண்களை  தெரிந்துக்கொண்டு அதில் ஒரு மாணவிக்கு ஆபாச வீடியோ அனுப்பியுள்ளார்.

அதிர்ச்சியடைந்த அப்பெண் பெற்றோர் ஆலோசனையின் பேரில் கல்லூரி முதல்வருக்கு தெரிவித்தார். விசாரணையில் ஆபாச வீடியோ அனுப்பியது காவளாளி பாலசுப்பிரமணி என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது கேளம்பாக்கம் காவல் நிலைத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதனையடுத்து  விசாரணை செய்த ஆய்வாளர் கோவிந்தராஜன், காவளாளியை கைது செய்து இணையதளத்தை தவறாக பயன் படுத்துதல், பெண்களுக்கு எதிராக குற்றம் புரிதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நிதிபதி முன்பாக ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.