கவிஞர் கபிலனின் மகள் தற்கொலை - சீமான் இரங்கல்!!

 
seeman

திரைப்பட பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை  மரணத்திற்கு சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார். 

suicide

திரைப்பட பாடலாசிரியரும்,  கவிஞருமான கபிலனின் மகள் தூரிகை.  இவர் எழுத்தாளராகவும் ஆடை , வடிவமைப்பாளராகவும் பணிபுரிந்து வந்தார்.  பல திரைப்படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்து வந்த தூரிகை மிகவும் தைரியசாலி என்று அவருக்கு நெருக்கமான வட்டத்தினர் கூறி வருகின்றனர்.  இந்த சூழலில் நேற்று சென்னை அரும்பாக்கம் எம் எம் டி ஏ காலனி பகுதியில் உள்ள தனது வீட்டில் தூரிகை தூக்கிட்டு நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். திருமணத்திற்கு பெற்றோர்கள் வற்புறுத்தியதால் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் கூறப்படுகிறது. இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தூரிகை கபிலனின் மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில், "புகழ்பெற்ற திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞருமான அன்புத்தம்பி கபிலன் அவர்களின் மகள் தூரிகை அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மனத்துயரமும் அடைந்தேன்! தன் உயிருக்கினிய அன்புமகளைப் பறிகொடுத்துவிட்டு, பேரிழப்பில் சிக்கித்தவிக்கும் தம்பியை ஆற்றுப்படுத்தவும் தேற்றவும் சொற்களின்றி கலங்கித்தவிக்கிறேன். கொடுந்துயரில் சிக்குண்டிருக்கும் தம்பி கபிலனுக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் ஆறுதலைத்தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.