திருடனுக்கு தேள் கொட்டியது போல் அலறுகிறார் - எச்.ராஜாவுக்கு திமுக பதிலடி

 
h

திருடனுக்கு தேள் கொட்டியது போல் அலறுகிறார் என்ரு  எச்.ராஜாவுக்கு திமுக பதிலடி கொடுத்திருக்கிறது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக , யாருக்கான பலப்பரிட்சை என்கிற தலைப்பில் நியூஸ் 18 தனியார் தொலைக்காட்சியில் விவாதம் நடந்தது.  இதில் அனைத்து கட்சியினரின் சார்பில் பங்கேற்று விவாதம் நடத்தினர்.  திமுக சார்பில் மாணவர் அணி தலைவர் ராஜீவ் காந்தி பங்கேற்று,  திராவிட மாடல் ஆட்சியின் சாட்சியாக ஈரோடு இருக்க வேண்டும் என விரும்புகிறோம் என்று கூறியிருந்தார்.

ra

இந்த விவாதத்தில் ராஜீவ்காந்தி விவாதித்த போது தெரிவித்த கருத்துகளால் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா ஆவேசமடைந்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள பிராமணர்கள் அனைவரையும் இனப்படுகொலை செய்வேன் என பேசிய திமுகவின் பேச்சாளர் அயோக்கியன் இன்று பாரதப் பிரதமரை திருடன் என்று பேசியதை அனுமதித்த நியூஸ்-18  கார்த்திகை செல்வனின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்கிறார்.  

அவர் மேலும்,  இதை நியூஸ் -18  நிர்வாகம் அங்கீகரிக்கிறதா? என்று கேட்கிறார். 

அதற்கு ராஜீவ்காந்தி,  ஒன்றிய அரசு மாநில அரசுகளின் நிதியினை திருடிக்கொள்கிறது என்று சொன்னவுடன்,  திருடனுக்கு தேள் கொட்டியது போல் அலறுகிறார்கள்!! என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.