7 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை -3 மாவட்டங்களில் கல்லூரிகளுக்கு விடுமுறை

 
ர்ர்

தொடர்ந்து பெய்து வரும் வடகிழக்கு பருவமழையினால் சென்னை மாவட்டத்தில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது . நேற்று சென்னையில் பகல் பொழுதில் கொஞ்சம் மழை ஓய்ந்திருந்த நிலையில் நேற்று பள்ளிகள் வழக்கம் போல் இயங்கின.   இந்த நிலையில் நேற்று இரவில் கனமழை பெய்ததை அடுத்து இன்று சென்னை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ரி

கனமழையினால் இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகம் மழை பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும்  ஐந்து தாலுகாக்களுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  திருவள்ளூர், ஆவடி, பொன்னேரி, பூவிருந்தவல்லி, அம்பத்தூர் ஆகிய ஐந்து தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

 திருவாரூர்,  மயிலாடுதுறை மாவட்டங்களில்  கனமழையின் காரணமாக இன்று பள்ளி,  கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  மயிலாடுதுறை மாவட்டத்திலும் கனமழையின் காரணமாக  நேற்றைய தினமும்  பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.  

 தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும்  இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூரில் இன்று கனமழையின் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 கனமழையினால் நாகப்பட்டினம் மாவட்டத்திலும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.