பள்ளி தாளாளர் வினோத் புழல் சிறையில் அடைப்பு

 
வ்

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த திருநின்றவூர் தனியார் பள்ளியின் தாளாளர் வினோத் கைது செய்யப்பட்டு அவருக்கு 15 நாள் சிறை தண்டனை அளித்துள்ளார் நீதிபதி.  இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

வ்வ்

12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு கவுன்சிலிங் என்கிற பெயரில் பாலியல் தொல்லை கொடுத்து வந்த தாளாளர் வினோத் மீது போக்சோ சட்டம் உள்ளிட்ட நாலு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.  இந்த பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதால் தலைமறைவாக இருந்த தாளாளர் வினோத்தை திருநின்றவூர் குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினர் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் திருநின்றவூர் இபி காலணியில் இயங்கி வருகிறது தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி.    இப்பள்ளியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.    பள்ளியின் தாளாளர்  வினோத்.   அவர்தான் பள்ளியை நிர்வகித்து வருகிறார்.  தாளாளர் பாலியல் தொழில் கொடுத்த விவகாரத்தில் பெற்றோர்கள் திரண்டு வந்து பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம், சாலை மறியலில் ஈடுபட்டனர்.   இதன் பின்னரே போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த தாளாளரை கைது செய்துள்ளனர்.

மகளிர் நீதிமன்ற நீதிபதி  முன்பு ஆஜர்படுத்தப்பட்ட அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.  இதையடுத்து அவர்  புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.