சீர்காழியில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை நாளை விடுமுறை

 
school

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் ஒன்று முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Breaking: பள்ளிகளுக்கு நாளை விடுமுறை... இங்க மட்டும் தான்... - a holiday  has been declared for schools tomorrow in sirkazhi taluk of tamil nadu due  to rains - Samayam Tamil


கனமழையின் காரணமாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி,கொள்ளிடம் சுற்றுவட்டாரம் முழுவதும் விளைநிலங்கள் மற்றும் வீடுகள் தண்ணீர் சூழ்ந்து பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சீர்காழி அருகே பெருந்தோட்டம்,மணிகிராமம் பகுதி மழையால் பேரிடரை சந்தித்துள்ளது.

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் கன மழை பெய்த காரணத்தினால் (1 முதல் 8 வரை)பள்ளிகளில் தொடர்ந்து மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு மறு சீரமைக்கும்பணி நடைபெற்று வருவதால், சீர்காழி வட்டத்தில் உள்ள 1 முதல் 8 வகுப்பு வரை (பள்ளிகளுக்கு)பயிலும் மாணவ, மாணவிகளுக்கு நாளை18/11/2022 ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாகவும், மாவட்டத்திலுள்ள மற்ற பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் லலிதா தெரிவித்துள்ளார்.