படிக்கவில்லை என்று கூறி திட்டிய ஆசிரியர் - தற்கொலை செய்து கொண்ட மாணவி!!

 
Death

சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் பகுதியில் சேர்ந்த  மாணவி ஒருவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் பள்ளி படங்களை சரியாக படிக்கவில்லை என்று கூறி அவரது ஆசிரியர்,  மாணவியை கண்டித்துள்ளார்.  இதனால் மனமுடைந்த மாணவி கடந்த சில தினங்களுக்கு முன்பு கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

suicide

 இந்த சூழலில் இன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பள்ளிக்கு தயாராகுவது போல் தயாராகி விட்டு அனைவரும் வெளியில் சென்ற பிறகு மாணவி  தனது துப்பட்டாவால் தனக்குத்தானே கழுத்தை இறுக்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார். பணி காரணமாக வெளியில் சென்ற பெற்றோர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது மாணவி துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி இறந்த நிலையில் இருப்பது தெரியவந்தது.

tn

 உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த பொழிச்சலூர் போலீசார் , மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.