8 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை! பள்ளியில் நடந்த கொடூரம்

 
கைது

ஆரணி அருகே அரசு பள்ளியில் 8ம் வகுப்பு மாணவிகளுக்கு  பாலியல் தொந்தரவு கொடுத்ததாக லேப் டெக்னீசியன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.அவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டனர்.

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: அரசுப் பள்ளி ஆசிரியா் கைது- Dinamani

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே குன்னத்தூர் கிராமத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் 6வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையில் சுமார் 750
மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இதில் பள்ளி தலைமையாசிரியை நந்தினி உட்பட சுமார் 30 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மேலும் பள்ளி ஆய்வக அலுவலராக சோமதாங்கல் கிராமத்தை சேர்ந்த கோவிந்தசாமி(60) என்பவர் பணிபுரிந்து வருகின்றார். இந்த பள்ளியில் உள்ள நூலகத்தில் 8ம் வகுப்பு மாணவிகளுக்கு கடந்த சில தினங்களாக பாலியல் தொல்லை நடப்பதாக மாணவிகள் தங்களின் பெற்றோர்களிடம் தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து மாணவ, மாணவிகளின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு, பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டனர்.  மேலும் தகவலறிந்த வந்த ஆரணி தாலுக்கா போலீசார் மற்றும் மாவட்ட கல்வி நிர்வாகம் வருவாய் துறை ஆகியோர் நேரில் வந்து 8ம் வகுப்பு மாணவிகளிடம் ரகசிய விசாரணையில் ஈடுபட்டார். இதையடுத்து ஆரணி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கோவிந்தசாமியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து திருவண்ணாமலை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். 8ம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு புகாரில் சிக்கி போக்சோ சட்டத்தின் கீழ் லேப் டெக்னீசன் கைது செய்யபட்டதால் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி லேப் டெக்னீ~ன் கோவிந்தசாமியை பணியிட நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.