கனமழையால் தஞ்சை, நாகை, திருவாரூர், வேலூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

 
Tomorrow school leave

கனமழை காரணமாக வேலூர், நாகை, திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Live Chennai: No holiday for schools today (Nov 15),holiday,schools,holiday  for schools today,holiday for schools chennai,rain,chennai rain,weather  forecast,school leave,chennai schools leave,are schools working today in  chennai,schools working today ...


நேற்று வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டி நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் சற்றே வலுப்பெற்று தமிழகம், புதுவை கடற்கரையை நோக்கி 10-12 தேதிகளில் நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக,தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கனமழை காரணமாக நாளை (11.11.2022) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அருண் தம்பு ராஜ் உத்தரவிட்டுள்ளார். இதேபோல் வேலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை காரணமாக பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் (11.11.2022) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் தஞ்சை மாவட்டத்திற்கு  மழை காரணத்தால்  நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை என மாவட்ட  ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவித்துள்ளார்.