சீர்காழி தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

 
mayiladuthurai

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறைதமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தொடக்கத்திலேயே கூடுதலாக பெய்துள்ளது. 

Extremely heavy rain batters Sirkazhi; 20,000 hectares of agricultural  fields submerged - The Hindu

குறிப்பாக,  மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒரே நாளில் 122 சென்டிமீட்டர் பெய்து மிகப்பெரிய பாதிப்புகளை அந்த மாவட்டத்தில் ஏற்படுத்தி உள்ளது.  சுமார் 2 லட்சம் ஏக்கரில் நெல்பயிர் பாதிப்பு, கரும்பு, வாழை, தோட்டக்கலை பயிர்கள் என விவசாயிகள் பெரும் இழப்புக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக, தஞ்சாவூர், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் பயிர் பாதிப்பு பெருமளவு ஏற்பட்டுள்ளது. பல லட்சக்கணக்கான வீடுகளில் தண்ணீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கால்நடை பாதிப்பு, மனித உயிரிழப்பு போன்ற சம்பவங்களும் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் கேரள பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, நாளை மிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழை நீர் வெளியேற்றும் பணிகள் காரணமாக விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் லலிதா தெரிவித்துள்ளார்.