கனமழை எச்சரிக்கை- சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
Nov 10, 2022, 20:00 IST1668090624371

கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை (11.11.2022) ஒருநாள் மட்டும் சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
அடுத்த இரண்டு நாட்கள், சென்னைக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை முதலே, கிண்டி, அடையாறு, ஆலந்தூர், மாம்பலம், ஆவடி, அம்பத்தூர், திருமுல்லைவாயல், பட்டாபிராம், திருவொற்றியூர், எண்ணூர், மணலி, வண்ணாரப்பேட்டை ராயபுரம் ஆகிய இடங்களில் இடியுடன் கனமழை பெய்து வருகிறது.
முன்னதாக சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரில் பொதுவாக இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும், ஒருசில பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.