அதிமுக கடிதம் வாங்க மறுப்பதாக தேர்தல் அதிகாரி தகவல்

 
sahu

அதிமுக கடிதம் வாங்க மறுப்பதாக தேர்தல் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். 

ops eps

இரட்டைத் தலைமை விவகாரத்தால் கடிதத்தை அதிமுக வாங்க மறுப்பது பற்றி தேர்தல் ஆணையத்திடம் தெரியப்படுத்தினார் மாநில தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு 2 முறை கடிதம் அனுப்பியும் பழனிசாமி தரப்பு 2 முறையும் திருப்பி அனுப்பியுள்ளது. இதுபற்றி தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு மின்னஞ்சலில் தெரியப்படுத்தியுள்ளார் சத்யபிரதா சாகு. 

முன்னதாக  ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாக அதிமுகவுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியிருந்தது. ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவிக்குமாறு அதிமுக பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு எடப்பாடி பழனிச்சாமிக்கு இந்திய சட்ட ஆணையம் கடிதம் எழுதியிருந்தது.