செம்மரக்கடத்தல் வழக்கில் சசிகலா உறவினர் பாஸ்கரன் கைது

 
tn

செம்மரக்கடத்தல் வழக்கில் சசிகலா உறவினர் பாஸ்கரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

tn

சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் ஜெயராமனின் மாமனார் பாஸ்கரன்.   இவர் சென்னை அண்ணா நகரில் வசித்து வரும் நிலையில் பர்னிச்சர் கடை நடத்தி வந்துள்ளார்.  இவர் மீது செம்மர கடத்தல் தொடர்பான பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் , கடந்த 2021 ஆம் ஆண்டு ஆந்திர போலீசார் செம்மரம் கடத்தல் வழக்கில் இவரை கைது செய்தனர். இதையடுத்து பாஸ்கரன் ஜாமினில் வெளியில் வந்தார்.

Semmaram

இந்நிலையில் செம்மரம் கடத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் சசிகலா உறவினரான பாஸ்கரன் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  பாஸ்கரனிடம் விடிய விடிய விசாரணை நடைபெற்ற நிலையில் , அவர் கைது செய்யப்பட்டுள்ளார் . பாஸ்கரன் நடத்தி வந்த பர்னிச்சர் கடையிலிருந்து ரூபாய் 48 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நேற்று இரவு 9 மணி அளவில் பாஸ்கரனை அவரது வீட்டில் இருந்து திநகர் ஜிஎன் செட்டி சாலையில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அலுவலகத்திற்கு அதிகாரிகள் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து கைது செய்யப்பட்ட அவர் இன்று எழும்பூர்  நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.