ஏழை மாணவியின் மருத்துவ கனவை நிறைவேற்றிய சசிகலா

 
sasikala

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம், வேடப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாணவி பட்டீஸ்வரியின் மருத்துவ கனவை நிறைவேற்றும் விதமாக, அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்து படிக்க தேவையான உதவிகளை சசிகலா வழங்கினர். 

SASIKALA

 திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம், வேடப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திரு.ஆறுமுகம் - திருமதி.இந்திராணி தம்பதியரின் மகளான செல்வி. பட்டீஸ்வரி, தனக்கு செவித்திறன் குறைபாடு இருந்தபோதும் விடா முயற்சியோடு, ஆடு மாடுகளை மேய்த்தபடி நீட் தேர்வுக்கு படித்து வெற்றி பெற்று, மருத்துவப்படிப்பில் சேருவதற்கு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் இடம் கிடைத்தும், பொருளாதார வசதியின்றி கல்லூரியில் சேர்ந்து படிக்க முடியாமல் சிரமப்படுவதை தொலைக்காட்சியில் வந்த செய்தியின் மூலமாக அறிந்த சசிகலா, அந்த எளிய குடும்பத்தை சேர்ந்த பெண்ணின் மருத்துவ கனவை நிறைவேற்றும் விதமாக மருத்துவ கல்லூரியில் சேருவதற்கு தேவையான கல்வி கட்டணம், தங்கும் விடுதி கட்டணம், புத்தகம், உடைகள் போன்ற உதவிகளை செய்துள்ளார். 

இதனைத் தொடர்ந்து, மருத்துவ மாணவி பட்டீஸ்வரி தனது பெற்றோருடன் சசிகலாவை நேரில் சந்தித்து தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.