"அதிமுகவில் சசிகலா மூக்கை நுழைக்க வேண்டாம்" - ஜெயக்குமார் விளாசல்

 
jayakumar

அதிமுக  குறித்து சசிகலா தேவையில்லாத கருத்து கூற வேண்டாம் என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

jayakumar

சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது பேசிய அவர் நாடாளுமன்ற தேர்தலுக்காக ஓபிஎஸ், ஈபிஎஸ்-ஐ சந்திக்க திட்டம் உள்ளதாக சசிகலா கூறிய கருத்தை விமர்சித்து பேசினார். அதில்,  "சசிகலா ஆயிரம் கருத்து சொல்லலாம். அதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது.  ஓபிஎஸ், தினகரன் ,சசிகலா மூன்று பேரும் ஒன்றுபட்டு தனி கட்சி தொடங்கி நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளலாம்.  மூவரும் ஒன்றுபட்டால் அவர்களுக்கு தான் வாழ்வு.  தமிழக மக்களுக்கும் அதிமுக தொண்டர்களுக்கும் எந்த வாழ்வும் கிடையாது . அதிமுகவில் சசிகலா மூக்கை நுழைக்க வேண்டாம்.  அதிமுக  குறித்து சசிகலா தேவையில்லாத கருத்து கூற வேண்டாம். 

sasikala

நானும் இருக்கிறேன் என்று காண்பித்துக் கொள்ள தான் ஓபிஎஸ் பேசி வருகிறார்.  ஓபிஎஸ் பொருத்தவரை தன்னுடைய குடும்பம் வாழ வேண்டும். தன்னுடைய நலனை பார்க்கும் சுயநலவாதி அவர்.  ஒரே நாடு ஒரே தேர்தல் நல்ல விஷயம். செலவுகள் தவிர்க்கப்படும் . 2024 ஆம் ஆண்டு ஒரே நாடு ஒரே தேர்தல் வந்தால் அதிமுக ஆட்சி அமையும். அதனால் தான் திமுக பயப்படுகிறது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரையில் அழகிரி சந்தித்தது குடும்ப பாசம் தான்.  இந்த குடும்ப பாசம் பின்னர் முட்டி மோதி வீதிக்கு வரும்" என்றார்.