அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - சசிகலா வேண்டுகோள்!!

 
sasikala

திமுக தலைமையிலான அரசு, தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை, முன்தேதியிட்டு அறிவித்து, நிலுவைத்தொகையோடு உடனே வழங்கிட வேண்டுகோள் என்று சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இதுகுறித்து சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 01-01-2022 முதல் மூன்று சதவிகித அகவிலைப்படி உயர்வினை முன் தேதியிட்டு அறிவித்து நிலுவைத் தொகையினை உடனே வழங்கிட வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.01-01-2022 முதல் மூன்று சதவிகித அகவிலைப்படி உயர்வினை மத்திய அரசு மார்ச் மாத இறுதியிலிலேயே வழங்கி விட்டது. இந்நிலையில் தமிழக அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி உயர்வு பற்றி சிந்திக்கக் கூட மனமின்றி நான்கு மாதங்களாக திமுக அரசு காலம் கடத்தி வருகிறது,நம் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சிக்காலங்களில் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக, தமிழக அரசு ஊழியர்களும் அகவிலைப்படியினை பெற்று வந்து உள்ளனர்.

mk Stalin biopic


கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அரசு ஊழியர்களின் பாதுகாவலன் என விளம்பரம் செய்துக் கொண்டு திமுக பல வாக்குறுதிகளை அரசு ஊழியர்களுக்கு அளித்து ஆட்சியை பிடித்தது, ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த உடன், அரசு ஊழியர்களுக்கு அளித்து வந்த அகவிலைப் படியைவிடுப்பினை ஒப்படைத்து பணம் பெறும் சலுகையினையும் பறித்துள்ளது,திமுக அரசு பதவி ஏற்ற நாள் முதல், தமிழக அரசு ஊழியர்களுக்கு தரவேண்டிய அகவிலைப்படியை, நிலுவைத் தொகையின்றி, பின் தேதியிட்டு வழங்கி, அரசு ஊழியர்களுக்கு துரோகத்தை இழைத்து வருவதை தமிழக அரசு ஊழியர்கள் இனியும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.

sasikala

அரசு ஊழியர்கள் தான் அரசின் அச்சாணி என்பதை ஒரு கணம் சிந்தித்து பார்த்து, தமிழக அரசு ஊழியர்களின் பிற முக்கிய கோரிக்கைகளையும், சட்டசபைத் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளையும் கருத்தில் கொண்டு விரைவாக நிறைவேற்றுவதுடன், பறிக்கப்பட்ட சலுகைகளையும் மீண்டும் அளிக்குமாறு திமுக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.இவை அனைத்திற்கும் மேலாக, திமுகவினரின் அராஜகங்கள், அத்துமீறல்களுக்கு மத்தியிலும், தமிழக அரசு ஊழியர்கள் ஒவ்வொருநாளும் தங்கள் அன்றாட பணிகளை மேற்கொள்வது மிகுந்த சிரமமாக இருப்பதாக சொல்லி வேதனைப்படுகிறார்கள். இதற்காகவே திமுக அரசு, தமிழக அரசு ஊழியர்களுக்கு கூடுதலாக அகவிலைப்படி உயர்வு அளிக்க முன் வர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். எனவே, திமுகவினர் இனியும் காலதாமதம் செய்யாது தமிழக அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 01-01-2022 முதல் மூன்று சதவிகித அகவிலைப்படி உயர்வினை முன் தேதியிட்டு அறிவித்து நிலுவைத் தொகையினை உடனே வழங்கிடுமாறு தமிழக அரசைக் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.