ஈரோடு இடைத்தேர்தல்- அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும்: சசிகலா

 
sasikala

2009 ஆண்டு மே 16 17 18 ஆகிய  நாட்கள் இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலையில் ஒன்றரை இலட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர் அந்த ஈகையினரின் தியாகத்தை போற்றும் வகையில் தஞ்சை விளார் கிராமத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டுள்ளது.

sasikala


தஞ்சை விளாரில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மறைந்த தியாகிகளுக்கு சசிகலா மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஈரோடு இடைத்தேர்தல் என்பது அரசியலில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும், எந்த மாதிரியான தாக்கம் என்பது பொறுத்திருந்து பார்ப்போம். ஈரோடு இடைத்தேர்தல் இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்வது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.  ஆளுநர் தேநீர் விருந்தை பல்வேறு அரசியல் கட்சிகள் புறக்கணித்துள்ளன. தமிழ்நாட்டின் பாரம்பரிய முறை விருந்தோம்பல்  கொண்டாடுவது.அப்படி இருக்கும்போது தவிர்ப்பது என்பது தமிழ்நாட்டிற்கு அழகல்ல” என்றார்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த  திருமகன் ஈவேரா மாரடைப்பால் கடந்த 04ம் தேதி காலமானார்.  இதனையடுத்து ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.