சசிகலா - ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் சந்திப்பு!

 
tn

ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் சசிகலா உடன் சந்தித்து பேசினார்.

tn

அதிமுக இன்னும் மாபெரும் இயக்கத்தை யார் கைப்பற்றுவது இந்த போட்டியின் ஓபிஎஸ்-ஈபிஎஸ் இருவரும் தனித்தனியே எதிர் திசையில் நிற்கின்றனர்.  அதிமுக பொது குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதுடன் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்பட்டார்.  இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளின் தீர்ப்பில் சமீபத்தில்  எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து பொதுக்குழு செல்லாது என அறிவிக்க கோரி தற்போது ஓ. பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தை நாடி உள்ளார். சில காலமாக சசிகலா மற்றும் டிடிவி தினகரனுக்கு ஆதரவான கருத்துக்களை கூறி வருகிறார் ஓபிஎஸ். அதிமுகவினர்  அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று தொடர்ந்து ஓபிஎஸ் மற்றும் சசிகலா இருவரும் வலியுறுத்தி வரும் நிலையில் , சசிகலா மற்றும் வைத்திலிங்கத்தின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

tn

இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் வைத்தியலிங்கம் வி.கே.சசிகலாவுடன் சந்திப்பு நிகழ்த்தினார். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே  திருமண நிகழ்வில் கலந்துகொள்ள  வருகை தந்த வி.கே.சசிகலா  அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்  வைத்திலிங்கத்தை சந்தித்தார். சந்திப்பின்போது வைத்திலிங்கத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை சசிகலா தெரிவித்தார். இதையடுத்து  அத்துடன் ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினர் வைத்தியலிங்கத்திற்கு சாக்லேட்டையும் சசிகலா வழங்கினார்.முன்னதாக சசிகலா தஞ்சாவூருக்கு மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் கோயில் விழாக்கள் மற்றும் தொண்டர்களை சந்தித்து பேசி வருவது குறிப்பிடத்தக்கது