அழ. வள்ளிப்பாவிற்கு வணக்கங்களை செலுத்துகிறேன் - பிரதமர் மோடி

 
வ

குழந்தை கவிஞர் அழ. வள்ளியப்பாவின் பிறந்தநாள் இன்று.   இதை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார் .  தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அதற்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.

’’திரு அழ. வள்ளிப்பாவிற்கு  அவரது பிறந்தநாளில் வணக்கங்களை செலுத்துகிறேன். அவர் மிகச் சிறந்த எழுத்துவன்மை மற்றும் கவிப்புலமை பெற்றிருந்தார். மேலும் குழந்தைகளிடையே வரலாறு, பண்பாடு மற்றும் இலக்கியம் ஆகியவற்றை பிரபலப்படுத்தியதற்காகவும் போற்றப்படுகிறார்.  அவரது படைப்புகள் இன்றளவிலும் பலரை ஊக்கப்படுத்தி வருகின்றன’’ என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் பிரதமர் மோடி.


’’தமிழ் குழந்தைகளின் இலக்கிய உலகின் பேராசான் திரு அழ. வள்ளியப்பா அவர்களின் நூற்றாண்டில் அவரது நினைவை போற்றிய நமது பாரத பிரதமர் திரு 
நரேந்திரமோடி அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.  தமிழ் குழந்தைகளுக்கு தேசியத்தையும் தெய்வீகத்தையும் அகிம்சையும் பாடல்களாக வழங்கிய திரு அழ. வள்ளியப்பா அவர்களின் படைப்புகளை மேலும் பாரதம் எங்கும் கொண்டு சேர்ப்போம்’’என்று கூறியிருக்கிறார் அண்ணாமலை.

ய்ந்

 புதுக்கோட்டையில் ராயபுரத்தில் 7. 11. 1922ல் பிறந்தவர் வள்ளியப்பா.  உயர்நிலைப் படிப்பை முடித்த வள்ளியப்பா சென்னையில் வங்கிப் பணியில் மேற்கொண்டு வந்தார்.  கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் பாடல்களும் , மஞ்சரி ஆசிரியர் டிஜே ரவி வழிகாட்டலும் வள்ளியப்பாவை குழந்தை  கவிஞர் ஆக்கின.  1944 ஆம் ஆண்டில் வள்ளியப்பாவின் முதல் குழந்தை இலக்கிய பாடல் தொகுதியான மலரும் உள்ளம் வெளிவந்தது.  அதன் பின்னர் வாழ்நாள் முழுவதையும் குழந்தைகளுக்கு குழந்தை இலக்கியத்தின் வளர்ச்சிக்கு நூல்களைப் படைத்து வந்தார் வள்ளியப்பா.

 1954 ஆம் ஆண்டில் மலரும் உள்ளம் நூலின் பெரிய பகுதி பின்பு , அதன் இரண்டாம் பகுதி சிரிக்கும் பூக்கள் என்னும் பெயரில் மூன்று தொகுதியாக வெளிவந்தன .  குழந்தை இலக்கிய வரலாற்றில் வள்ளியப்பாவின் இந்த மூன்று தொகுதிகளுக்கு குறிப்பிடத்தக்கன.

வ

மாம்பழமாம் மாம்பழம் பல்கோவா மாம்மழம் என்று வள்ளியப்பாவின்  பாடல்கள் குழந்தைகளிடம் வெதுவாக ஈர்க்கும் வகையில் அமைந்தது அவரது சிறப்பு . 1982 ஆம் ஆண்டில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் வள்ளியப்பாவிற்கு தமிழ் பேரவை செம்மல் என்னும் பட்டம் வழங்கியது.  மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் ஆட்சி பேரவை கூட்டத்தில் பங்கேற்ற வள்ளியப்பா குழந்தை இலக்கியத்தை பல்கலைக்கழகத்தில்  பாடமாக வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி பேசி முடித்த போது மயங்கி சாய்ந்தார்.  1989 ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் தேதி வள்ளியப்பாவின் உயிர் பிரிந்தது.

உயிர் பிரிந்த போதும் வள்ளியப்பாவின்  மூன்று விரல்கள் மடிந்து இரண்டு விரல்கள் பேனா பிடிப்பது போன்றே இருந்தன.  உயிர் பிரியும் அந்த தருணத்தில் குழந்தை கவிஞர் ஏதோ ஒரு குழந்தை பாடலை எழுத முயன்று அந்த முயற்சியிலேயே தான் உயிர் துறந்து இருக்கிறார் என்று நினைக்கத் தோன்றுகிறது என்று கூறி இருக்கிறார் எழுத்தாளர் பூவண்ணன்.