சேலம்,நாமக்கல், தி. மலை : பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

 
r

கனமழையின் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளார் ஆட்சியர்.  இதேபோல் சேலம் மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து உத்தரவிட்டு உள்ளார் அம்மாவட்ட ஆட்சியர்.  நாமக்கல் மாவட்டத்திலும் பள்ளி ,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

rp

கனமழையின் காரணமாக திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களுக்கு இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அம் மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ள நிலையில் சேலம், திருவண்ணாமலை, நாமக்கல் மாவட்டங்களிலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது .

 வங்கக்கடலில் நேற்று முன்தினம் குறைந்த தாற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.  இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை கடலோர பகுதிகளை ஒட்டி நிலவுகிறது.   இது தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நாளை நகர்ந்து வரக்கூடும்  என்பதால் இதன் காரணமாக தமிழகம் ,புதுச்சேரி காரைக்காலில் இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது.

 தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில்   மிக கனமழை பெய்து வருவது வருவதால் இன்று பள்ளி ,கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.