சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம்!!

 
tn

கேரள மாநிலம் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டலம் மற்றும் மகர விளக்கு பூஜைகளை முன்னிட்டு கடந்த நவம்பர் 16ஆம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டு தினசரி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வந்தன.  கொரோனா தொற்றுக்குப் பிறகு சபரிமலையில் மீண்டும் வழக்கம் போல பக்தர்கள் கூட்டம் அலைமோத தொடங்கிவிட்டது.  

sabarimala

நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கில் பக்தர்கள் சபரிமலைக்கு வருகை தந்த நிலையில் ஆன்லைன் மற்றும் உடனே உடனடி முன்பதிவு முறையில் பக்தர்கள் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டு வந்தனர்.  அத்துடன் பெண்கள் ,குழந்தைகள், வயதானவர்களுக்கு சாமி தரிசனம் செய்ய தனி வரிசை ஏற்பாடு செய்யப்பட்டது.  இதன் மூலம் சன்னிதானம் பகுதியில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தரிசனம் செய்யும் பக்தர்களை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

tn

மண்டல பூஜை நிறைவடைந்து கடந்த 27ஆம் தேதி நடை அடைக்கப்பட்ட நிலையில் கடந்த 30ஆம் தேதி மகரவிளக்கு பூஜைக்காக மீண்டும் நடை திறக்கப்பட்டது. இந்நிலையில் இன்று சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரஜோதி நடைபெற உள்ளது.  ஏற்கனவே நாளொன்றுக்கு லட்சக்கணக்கில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில்,  இன்று பொன்னம்பலம் மேட்டில் ஐயப்பன் ஜோதி வடிவில் மூன்று முறை காட்சி தரும் நிகழ்வு நடைபெற உள்ளது. எனவே மகரஜோதி நிகழ்வில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 56 நாட்களில் மட்டும் சபரிமலையில் 43 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொண்டுள்ளனர். இதன் மூலம் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சுமார் ரூ. 310 கோடி வருமானம் கிடைத்துள்ளது.