ரூ.10,000க்கு மேல் பணம் எடுக்க வேண்டுமா ? OTP கட்டாயம்

 
sbi

ஏடிஎம் இயந்திரத்தில் பத்தாயிரம் ரூபாய் அல்லது பத்தாயிரம் ரூபாய்க்கு மேலோ பணம் எடுத்தால் OTP எண் பதிவு செய்வதை எஸ்.பி.ஐ. வங்கி கட்டாயமாக்கியுள்ளது. 

ஸ்டேட் பேங் ஆஃப் இந்தியா என்று அழைக்கப்படும் எஸ்.பி.ஐ வங்கி நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக விளங்கி வருகிறது. இந்த வங்கி சைபர் குற்றங்களில் இருந்து தங்களது வாடிக்கையாளரை காக்கும் வகையில் அவ்வப்போது புதிய நடைமுறைகளை கொண்டு வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுப்பதற்கான புதிய நடமுறை ஒன்றை அந்த வங்கி கொண்டு வந்துள்ளது. அதாவது ஏடிஎம் இயந்திரத்தில் பத்தாயிரம் ரூபாய் அல்லது பத்தாயிரம் ரூபாய்க்கு மேலோ பணம் எடுத்தால் OTP எண் பதிவு செய்வதை எஸ்.பி.ஐ. வங்கி கட்டாயமாக்கியுள்ளது. சைபர் குற்றங்களைத் தடுக்க இந்த நடைமுறையை கொண்டு வந்துள்ளதாக அந்த வங்கி விளக்கம் அளித்துள்ளது. 

நீங்க SBI ‘டெபிட் கார்ட்’ வச்சிருக்கீங்களா? இதோ உங்களுக்கான அசத்தல் அறிவிப்பு!

இந்த புதிய நடைமுறையின்படி ஒவ்வொரு முறையும் ஏடிஎம்மில் ரூ.10 ஆயிரம் அல்லது அதற்கு மேல் பணம் எடுக்கும்போது ஓடிபி பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த ஒன் டைம் பாஸ்வேர்ட் ஒரே ஒரு பரிவர்த்தனைக்கு மட்டுமே பயன்படுத்தக் கூடியாது. அடுத்ததாக மீண்டும் ரூ.10 ஆயிரத்துக்கும் மேல் பணம் எடுக்க வேண்டும் என்றால் அதே போல் ஓடிபியை பதிவு செய்த மொபைலில் பெற்று திரையில் பதிவிட்டே பணம் எடுக்க இயலும்.
 இந்த நடைமுறை விரைவில் அனைத்து வங்கிகளிலும் கொண்டுவரப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் மர்ம நபர்கள், ஏமாற்று பேர்வழிகள் வங்கிக் கணக்குகளில் இருந்து பண மோசடி செய்வது தவிர்க்கப்படும் என்று எஸ்பிஐ தெரிவித்துள்ளது. 

sbi

OTP பயன்படுத்தி எப்படி பணம் எடுக்கலாம்?

10,000 ரூபாய் அல்லது அதற்கு மேல் நீங்கள் பணம் எடுக்க வேண்டும் என்றால் ஏ.டி.எம். கார்டுடன், வங்கியில் பதிவு செய்யப்பட்ட எண்ணுடன் கூடிய செல்போனை கையில் வைத்திருக்க வேண்டியது அவசியம். நீங்கள் எடுக்கும் தொகை 10,000 ரூபாய்க்கு மேல் இருந்தால், பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணிற்கு OTP வரும். அதில் வரும் ரகசிய எண்ணை நீங்கல் ஏடிஎம் இயந்திரத்தின் திரையில் பதிவிட வேண்டும் அவ்வாறு பதிவிட்டால் அந்த பரிவர்த்தனை நிறைவு பெற்றவுடன் நீங்கள் 10,000 ரூபாய்க்கு மேல் பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.