இக்கட்டான சூழ்நிலையில் கூட சிரிக்கக்கூடியவர் ஈபிஎஸ்- எஸ்.ஏ.சந்திர சேகர்

 
SAChandrasekar

எம்ஜிஆர் கிரியேஷன்ஸ் எனும் பெயரில் புதியதாக தொடங்கப்பட உள்ள தொண்டு நிறுவனத்தின் தொடக்க நிகழ்ச்சி, சென்னை தியாகராய நகரில் உள்ள வாணி மகாலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற எடப்பாடி பழனிச்சாமி தொண்டு நிறுவனத்தை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி, கடம்பூர் ராஜு, சி.விஜயபாஸ்கர், உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அதேபோல் திரைப்பட இயக்குனர்கள் எஸ்.ஏ சந்திரசேகர், ஆர்.கே.செல்வமணி, ஆர்.வி. உதயகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய்யின் தந்தையும் திரைப்பட இயக்குனருமான எஸ். ஏ.சந்திர சேகர், “எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவி ஏற்ற போது தாமே அவரை விமர்சித்துள்ளேன். இவ்வளவு பெரிய பொறுப்பை இவர் எப்படி செய்வார்? என சந்தேகப்பட்டேன். அரசியல் வரலாற்றில் ஒரு சாமானியன், விவசாய குடும்பத்தில் பிறந்தவர் முதல்முறையாக இந்த பதவியில் அமர்ந்ததை பாராட்ட வேண்டும். ஈபிஎஸ் ஒரு மனிதநேயமிக்கவர். எவ்வளவு  இக்கட்டான சூழ்நிலையில் கூட சிரிக்கக்கூடியவர். தான் ஒரு சிறந்த நிர்வாகி என்பதை ஒரே வருடத்தில் நிரூபித்து காட்டினார். அவரது எளிமையை பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன். எவ்வளவு இக்கட்டான நிலையிலும் அவரிடத்தில் இருக்கும் சிரிப்பை பார்த்து  வியந்துள்ளேன். முதலமைச்சர் இருக்கையில் அமர்ந்துகொண்டு வர பிரச்சனைகளை சிரித்துக்கொண்டே சமாளித்தார். அதனை பார்த்து நான் ரசித்தேன்.அதற்காகவே நாம் பாராட்ட வேண்டும்.

சாதாரண மனிதனாக நாம ஒரு பொண்டாட்டி ஒரு பிள்ளையே சமாளிக்க முடியாது. ஆனா எடப்பாடி பழனிச்சாமி எவ்ளோ பெரிய பிரச்சனை வந்தாலும் சிரிச்சே சரிசெய்துவிடுவார். நீங்கள் அந்த முதலமைச்சர் சீட்டில் அமர்ந்தது உங்கள் பெற்றோர் செய்த புண்ணியம்” எனக் கூறினார்.