திருப்பூர் காவல் ஆணையராக பிரபாகரன் ஐபிஎஸ் நியமனம்!!

 
tn

திருப்பூரின்  புதிய காவல் ஆணையராக எஸ்.பிரபாகர் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

tn

திருப்பூர் மாநகராட்சியின் புதிய காவல் ஆணையராக எஸ். பிரபாகரன் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,  சென்னை கிழக்கு மண்டல கூடுதல் ஆணையராக உள்ள எஸ்.  பிரபாகரன் தற்போது  திருப்பூர் நகரத்தின் ஐஜியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். ஐபிஎஸ் பிரபாகரன் பதவி உயர்வினால் தற்போது திருப்பூர் காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னையில் டி.ஐ.ஜி பதவியில் இருக்கும் பிரபாகரனுக்கு தற்போது ஐஜியாக பதவி உயர்வு கிடைத்துள்ளது. தற்போது திருப்பூர் நகர காவல் ஆணையராக இருந்த பாபு ஐபிஎஸ் மருத்துவ விடுப்பில் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.