காங்கிரஸ் கட்சியிலிருந்து ரூபி மனோகரன் இடைநீக்கம்..

 
காங்கிரஸ் கட்சியிலிருந்து ரூபி மனோகரன் இடைநீக்கம்.. 

காங்கிரஸ் கட்சியில் இருந்து சட்டமன்ற உறுப்பினர் ரூபி  மனோகரன் இடைநீக்கம் செய்யப்படுவதாக,  ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே .ஆர். ராமசாமி அறிவித்துள்ளார்.  

2024 மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தப்பணிகள் மேற்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டம்,  கடந்த நவம்பர் 15, 16 ஆகிய இரு தேதிகளில் சென்னை, சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது.  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில்  நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் ரூபி மனோகரன் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது,   கட்சிக்காரர்கள் இடையே தள்ளுமுள்ளு உண்டாகி அடிதடி ஏற்பட்டு 3 பேருக்கு ரத்தக்காயம் ஏற்பட்டது.
 காங்கிரஸ் கட்சியிலிருந்து ரூபி மனோகரன் இடைநீக்கம்.. 
இந்த அசம்பாவிதங்களுக்கு ரூபி மனோகரன் தான் காரணம் என்று கூறி 62 மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் தீர்மானம் நிறைவேற்றி ஒழுங்கு நடவடிக்கைக் குழுவிற்கு அனுப்பியுள்ளனர். இதனையடுத்து   ரூபி மனோகரனுக்கு காங்கிரஸ் ஒழுங்கு  நடவடிக்கை குழு தலைவர் கே. ஆர். ராமசாமி , கடந்த வாரம் நோட்டீஸ்  அனுப்பியிருந்தார். அதில்  நவம்பர் 24ஆம் தேதி( இன்று)  காலை 10:30 மணிக்கு ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்சி துறை தலைவர் ரஞ்சன் குமாரும் விளக்கம் அளிக்குமாறு  உத்தரவிடப்பட்டது.  

காங்கிரஸ் கட்சியிலிருந்து ரூபி மனோகரன் இடைநீக்கம்.. 

அதன்படி இன்று விசாரணை நடத்தப்பட்டது. அதன்  பின்னர்  செய்தியாளர்களை சந்தித்த கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி, “ரூபி மனோகரன் 15 நாட்கள் கால அவகாசம் கோரியுள்ளார். ஆனால் அது ஏற்றதாக இல்லை என முடிவு செய்துள்ளோம். ரூபி மனோகரன் விளக்கம் தெரிவிக்கும் வரை காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக்கி வைக்கிறோம்” என்று அறிவித்தார். இதுதொடர்பான கடிதமும் ரூபி மனோகரனுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.,