ஈரோட்டில் ரூ.60,000 குழந்தை விற்பனை - பெற்றோருக்கு வலைவீச்சு

 
baby

ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட சாஸ்திரி நகர், பகவதியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விஷ்ணு. இவர் தனியார் பேருந்தில் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பூர்ணிமா. பூர்ணிமாவிற்கு 13 வயதிலேயே திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு ஒரு மகள், மகன் உள்ள நிலையில் பூர்ணிமாவிற்கு 17 வயதாக இருந்த போது கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.  குழந்தை பிறந்த சில தினங்களில்,  பூர்ணிமாவின் குடும்பத்தினர் 60 ஆயிரம் ரூபாய்க்கு அந்த குழந்தையை விற்பனை செய்துள்ளனர்.

Baby Girl For Sale : 15 రోజుల ఆడ పసిగుడ్డును రూ. 80 వేలకు అమ్మేసిన  తల్లిదండ్రులు.. | baby girl for Rs.80,000 sale in vanasthalipuram

இந்த சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், பூர்ணிமாவிற்கும் அவரது தந்தை சண்முகத்திற்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சண்முகம், மகளை சிக்க வைப்பதாக நினைத்து, குழந்தை விற்பனை குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு 1098 எண்ணில் புகார் அளித்திருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறையினர் இது குறித்து ஈரோடு தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.  இதன் பேரில் போலீசார் விசாரணை நடத்திய போது, சினிமாவை மிஞ்சும் வகையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஈரோட்டில் நடந்த குழந்தை விற்பனை சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

பூர்ணிமா குடும்பத்தினர் அருகில் வசிக்கும் ஒருவரின் உதவியுடன்,  ஏற்கனவே சேலம் உட்பட பல மாவட்டங்களில் குழந்தை விற்பனை வழக்கில் தொடர்புடைய  ஈரோட்டை சேர்ந்த நிஷா மற்றும் அவரது சகோதரி மூலம் குழந்தையை விற்பனை செய்திருப்பதும், இதற்கு பெருந்துறை அருகே உள்ள கருமாண்டிசெல்லிபாளையத்தை சேர்ந்த சத்துணவு அமைப்பாளர், அவரது கணவர் உள்ளிட்டோர் இடைத்தரகர்களாக செயல்பட்டதும் தெரியவந்துள்ளது. சில மாதங்களுக்கு முன் குழந்தையை பார்க்க வேண்டும் என பூர்ணிமா கேட்ட போது, அது அதிமுக பிரமுகரின் இல்லத்தில் வளர்வதாக கூறி அவரை சமாதானம் செய்துள்ளனர். ஆனால் குழந்தை புரோக்கர்கள் மூலம் திருப்பூரில் உள்ள தொழிலதிபர் ஒருவருக்கு 6 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

 குழந்தை விற்பனை வழக்கில் முதல் குற்றவாளியாக பூர்ணிமாவையும், இரண்டாவது குற்றவாளியாக அவரது கணவர் விஷ்ணுவையும் சேர்த்துள்ளனர். மேலும் சட்டத்திற்கு புறம்பாக குழந்தை விற்றவர்கள் வளர்ப்பவர்களையும் பெயர் குறிப்பிடாமல் வழக்கில் இணைத்துள்ளனர்.. இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் தலைமறைவாக இருப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர். தலைமறைவாக உள்ள குழந்தையின் பெற்றோர் மற்றும் இடைத்தரகர்களை பிடித்தால் மட்டுமே குழந்தை தற்போது எங்கே இருக்கிறது.? யார் மூலம் எவ்வளவு தொகைக்கு விற்பனை செய்யப்பட்டது.? இதில் தொடர்புடைய நபர்கள் யார் யார் போன்ற விபரங்கள் முழுமையாக தெரிய வரும்.