எஸ்பி வேலுமணி வீட்டில் நடந்த சோதனையில் ரூ.32.98 லட்சம், 1,228 கிராம் தங்கம் பறிமுதல்

 
cbe velumani

கோவை குனியமுத்தூரில்  முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி இல்லத்தில் காலை 6.00மணிக்கு துவங்கிய லஞ்ச ஒழிப்பு துறை  சோதனை மாலை 3.00 மணி அளவில் நிறைவடைந்தது. கோவை சுகுணாபுரம் பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் சுமார் 8 மணி நேரம் சோதனை நடைபெற்றது. 

File:SP Velumani.jpg - Wikipedia

இதையடுத்து கோவை சுகுணாபுரத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன் கூடியதாக கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 7 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்களை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் சந்தித்து பேசினார்.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் எஸ்.பி.வேலுமணிக்கு மற்றும் தனியார் நிறுவன உரிமையாளர் அலுவலகங்களில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு துறை சோதனையில் ரூ.32.98 லட்சம் ரொக்கமும், 1228 கிராம் தங்க நகைகளும், 948 கிராம் வெள்ளிப் பொருட்களும் மற்றும் 10 நான்கு சக்கர வாகனங்களும் கண்டறியப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய 316 ஆவணங்கள் மற்றும் 2 வங்கி பெட்டக சாவிகள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன இவ்வழக்கு விசாரணையில் உள்ளது.