ஜல்லிக்கட்டில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்

 
mkstalin

ஜல்லிக்கட்டு போட்டிகளின்போது உயிரிழந்த 2 வீரர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

jallikattu

பாலமேடு, சூரியூரில் ஜல்லிக்கட்டில் காளை முட்டி இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பாலமேடு ஜல்லிக்கட்டில் உயிரிழந்த அரவிந்த் ராஜ் குடும்பத்தினருக்கும், பெரிய சூரியர் ஜல்லிக்கட்டில் உயிரிழந்த கண்ணக்கோண்பட்டியை சேர்ந்த அரவிந்த் என்பவரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துளார். 

தமிழ்நாட்டில் அவனியாபுரம், பாலமேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான ஜல்லிக்கட்டு போட்டி விமரிசையாக நடைபெற்றது. இதில் வெற்றிப்பெற்ற வீரர்களுக்கு கார், இருசக்கர வாகனம், தங்க நாணயம் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. முறையாக அனுமதி அளித்து முறையான பாதுகாப்பு அம்சங்களோடு பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக அரசு நடத்திவருகிறது.