விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த சோதனையில் ரூ.18.37 லட்சம், 1,872 கிராம் தங்கம் சிக்கியது

 
vijaya baskar

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் காலை 6 மணி முதல் 8 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த சோதனை பிற்பகல் 3.30 மணிக்கு நிறைவடைந்தது. 

Overcharging hospitals to face the heat: C Vijayabaskar- The New Indian  Express

காலை முதல் அவரது வீட்டில் உள்ள ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வந்ததாகவும் என்னென்ன மாதிரியான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது என்பது குறித்து அறிக்கையாக சமர்ப்பிக்கப்படும் எனவும் சோதனை நிறைவில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் தெரிவித்தார்.லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளின் சோதனை நிறைவு செய்தை தொடர்ந்து அவரது வீட்டின் முன்பு குவித்து இருந்த விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் முழக்கங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் என்னென்ன ஆவணங்களை கைப்பற்றினார்கள் என்று தகவல் தெரிவிக்காமல் சென்ற நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளை கண்டித்து முழக்கம் எழுப்பி வருகின்றனர்

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்பான  சோதனையில் 18.37 லட்சம் ரூபாய், 1872 கிராம் தங்க நகைகளும், 8.28 கிலோகிராம் வெள்ளி பொருட்கள் கண்டறியப்பட்டன. மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய 120 ஆவணங்கள், 1 வன் தட்டு, 1 பென்டிரைவ், 2 ஐ போன்கள் மற்றும் 4 வங்கி பாதுகாப்பு பெட்டக சாவிகள் இவ்வழக்கின் விசாரணைக்காக கைப்பற்றப்பட்டன.