ரூ.1.56 கோடியில் கலைஞருக்கு சிலை அமைக்கும் பணி தீவிரம்!!

 
tn

சென்னை ஒமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில்,  ரூ.1.56 கோடி மதிப்பீட்டில் கருணாநிதிக்கு சிலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. 

tn

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கடந்த 26ம் தேதி சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பேசும்போது , திருவாரூரில் முத்துவேலர் - அஞ்சுகம் அம்மையாருக்கு மகனாக கலைஞர் பிறந்து துதித்த நாளாக ஜூன் 3 ஆம் நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று  மாமன்றத்தில் நெஞ்சில் விரும்பக்கூடிய மகிழ்ச்சியால் , இதயத்தில் துடிக்க கூடிய எழுச்சியால்,  சிந்தனையாளர்களில் வெளிப்படும் நன்றி உணர்வால் தெரிவிக்கிறேன் என்று கூறியிருந்தார். அத்துடன் வரும் ஜூன் 3-ஆம் தேதி சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கம்பீர கலைஞரின் சிலை நிறுவப்படும் என்று கூறியிருந்தார்.

tn

இந்நிலையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி சிலை அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் முதலமைச்சர் அறிவித்த நாளிலிருந்து தொடங்கப்பட்டது.  கருணாநிதி சிலை பீடம் உள்ளிட்ட பணிகள் சுமார் ரூ.1.56 கோடி மதிப்பில் நடைபெறுவதாக பொதுப்பணித் துறை தெரிவித்துள்ளது.  ஜூன் மூன்றாம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளன்று சிலை திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  முன்னதாக 1975ஆம் ஆண்டு ஆண்டுக்கு பிறகு 2022-ல் சென்னை அண்ணா சாலையில் மீண்டும் கலைஞர் சிலை அமைக்கப்பட உள்ளது என்பது வரலாற்றின் மிக முக்கியமான  ஒன்றாக பார்க்கப்படுகிறது. ரூ.1.56 கோடி மதிப்பில் அமைக்கப்படவுள்ள இந்த சிலை 16 அடியில்  உயரமானதாகவும், வெண்கலத்தாலும் அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.