சென்னை விமான நிலையத்தில் ரூ.1.10 கோடி தங்கம் பறிமுதல்

 
gold

சென்னை விமான நிலைய சுங்கத்துறையினரால் ரூ.1.10 கோடி மதிப்புள்ள 2.272 கிலோ கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Several flights cancelled at Chennai airport - The Hindu


உளவுத் தகவல் அடிப்படையில் சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் இன்று (05.01.2023) துபாயிலிருந்து வந்த விமானப்பயணி ஒருவரை இடைமறித்து விசாரணை நடத்தினர். இவர் தமது உடலில் தங்கப்பசையை மறைத்து கடத்தி வந்தது ஆய்வின் போது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து ரூ.37.56 லட்சம் மதிப்புள்ள 770 கிராம் 24 கேரட் சுத்தத் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதே போல், துபாயிலிருந்து வந்த மற்றொரு விமானத்தில் 2 பயணிகளிடம் விசாரணை மேற்கொண்ட போது 2 பொட்டலங்களில் தங்கப் பசையை வைத்து தங்களின் உடலில் மறைத்து கடத்த முயற்சி செய்தது கண்டறியப்பட்டது. இவர்களிடமிருந்து ரூ.73.28 லட்சம் மதிப்புள்ள 1,502 கிராம்  24 கேரட் சுத்தத் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் நேற்று (04.01.2023) கொழும்பு செல்லவிருந்த விமான  பயணி ஒருவரை இடைமறித்து சோதனை செய்தபோது, ரூ.15.92லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பண நோட்டுகளை மறைத்து எடுத்துச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை கூடுதல் ஆணையர் கே பி ஜெயகர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.