பழனி முருகன் கோவிலில் ரோப்கார் சேவை இன்று நிறுத்தம் - காரணம் இதோ!

 
palani

மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக பழனி முருகன் கோவிலில் ரோப்கார் சேவை இன்று நிறுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவில் உலக புகழ்பெற்ற கோவில் ஆகும். இங்கு விழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இதேபோல் சாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இவ்வாறு கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்ல படிப்பாதை பிரதான வழியாக உள்ளது. மேலும் பக்தர்கள் மலைக்கோவிலுக்கு எளிதில் சென்றுவர ரோப்கார், மின்இழுவை ரெயில் ஆகிய சேவைகள் உள்ளன. 

இந்த ரோப்கார் நிலையத்தில் பக்தர்கள் பாதுகாப்புக்காக மாதாந்திர, வருடாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அப்போது ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டு பணிகள் நடைபெறும். அதன்படி, பழனி ரோப்கார் நிலையத்தில் இன்று  மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக ரோப்கார் சேவை இன்று ஒருநாள் மட்டும் நிறுத்தப்படுவதாகவும், பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மின்இழுவை ரெயில், படிப்பாதையை பயன்படுத்தி மலைக்கோவிலுக்கு செல்லலாம் எனவும், கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.