தேநீர் விருந்துக்கு வருமாறு முதல்வருக்கு ஆளுநர் அழைப்பு

 
MKstalin rn ravi

குடியரசு தினத்தை முன்னிட்டு, ஆளுநர் ஆர்.என்.ரவி, மாலை 5 மணிக்கு கிண்டி ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். 

தேநீர் விருந்தை திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மதிமுக விடுதலை சிறுத்தைகள், சிபிஎம், தமிழக வாழ்வுரிமை கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, உள்ளிட்ட இடதுசாரிகள் புறக்கணித்துள்ளனர். ஆனால் ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை அரசியல் கட்சிகள் புறக்கணிக்க கூடாது விருந்தோம்பலை புறக்கணிக்கணிப்பது தமிழர்களுக்கு அழகல்ல என சசிகலா தெரிவித்திருந்தார்.


இந்நிலையில் குடியரசு தின தேநீர் விருந்தில் பங்கேற்க வருமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தொலைபேசியில் அழைப்பு விடுத்துள்ளார். ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் மோதல் நிலவிவரும் சூழ்நிலையில், ஆளுநர் ரவி முதல்வரை அழைத்திருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. சமீபத்தில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பொங்கல் விழாவையும் முதலமைச்சர் முக ஸ்டாலின் புறக்கணித்திருந்தார். 

முன்னதாக ஆளுநர் மாளிகையில் நடைபெறும் குடியரசு தின விழா தேநீர் விருந்தை விடுதலை சிறுத்தை கட்சி புறக்கணிப்பதாக அறிவித்ததற்கு, டீ செலவு மிச்சம் என அண்ணாமலை கூறியிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.