‘வங்கத்து சிங்கம்’ வழியில் போராடிய ஐயா தேவர் - உதயநிதி ஸ்டாலின் மரியாதை..

 
‘வங்கத்து சிங்கம்’ வழியில் போராடிய ஐயா தேவர் - உதயநிதி ஸ்டாலின்  மரியாதை..


பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் பங்கேற்று திமுக இளைஞரணி தலைவரும், சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.  

 ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் இன்று முத்துராமலிங்க தேவரின் 115 வது ஜெயந்தி விழாவும் 60-வது குருபூஜை விழாவும் நடைபெற்றது.  அக் 28ஆம் தேதி ஆன்மீக விழாவாகவும்,  அக்  29ஆம் தேதி அரசியல் விழாவாகவும்,  இன்று அக்- 30ஆம் தேதி அரசு விழாவாகவும் கொண்டாடப்பட்டது.  இதனையொட்டி  தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மரியாதை செலுத்தினர். அதேபோல் காலை முதலே அதிமுக, பாஜக, மதிமுக, நாம் தமிழர் உள்பட பல்வேறு அரசியல் கட்சியினரும் மரியாதை செலுத்தினார்..  

 தேவர் ஜெயந்தி…

அந்தவகையில் சேப்பாக்கம் தொகுதி  எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் பசும்பொன்னில் செலுத்துவதற்காக தனி  விமானம் மூலம் சேலத்தில் இருந்து மதுரைக்குச் சென்றார்.  பின்னர்  மதுரையிலிருந்ந்து கார் மூலம் பசும்பொன் சென்ற அவர் அங்கு , தேவர் சிலைக்கு மாலையணிவித்து மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அவருடன் அமைச்சர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.  

தேவர் சிலைக்கு திமுக மூத்த அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை..

 இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “விவேகமும்-வீரமும் நிறைந்த பேச்சால், செயல்பாட்டால் விடுதலைப் போருக்கு தமிழக இளைஞர்களை படைத்திரட்டி அனுப்பிய பெருமகனார், ‘வங்கத்து சிங்கம்’ வழியில் போராடிய ஐயா முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் ஜெயந்தி விழாவில் பசும்பொன்னில் அமைச்சர் பெருமக்களுடன் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினோம்.  ” என்று குறிப்பிட்டுள்ளார்.