அதிமுக சட்ட விதிகளில் ஏராளமான திருத்தங்கள் - இரட்டை தலைமை பதவி ரத்து!!

 
ttn

சென்னை வானகரத்தில் நடைபெற்று வரும் அதிமுக செயற்குழு கூட்டம் நிறைவு பெற்ற நிலையில், அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் பொதுக்குழு கூட்டம் தொடங்கியது.

அதிமுகவில் இடைக்கால பொதுச்செயலாளர் பதவியை உருவாக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில்  எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யும் தீர்மானம் பொதுக்குழுவில் நிறைவேறியது.

tn

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கான கட்சி சட்ட விதி 20அ- ஐ மாற்றம் செய்து, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு பதில் கழக பொதுச்செயலாளர் என்று விதி திருத்தம் செய்யப்பட்டது. அத்துடன் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தவும், தேர்தல் அதிகாரியை நியமிக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  அதிமுகவில் இரட்டை தலைமை பதவியை ரத்து செய்து தீர்மானமும், ஒருங்கிணைப்பாளர்கள் பதவியும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பை சமாளிக்கும் நோக்கத்துடன் அதிமுக சட்ட விதிகளில் ஏராளமான திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது.  இதுவரை இல்லாத அளவுக்கு பொதுச்செயலாளர் தேர்தலுக்கான விதிகளிலும் திருத்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் அதிமுகவில் இருந்து வந்த கழக ஆலோசனைக்குழு இன்றுமுதல் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

tn

இந்நிலையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இரட்டை தலைமையால் தொய்வு பெற்றிருக்கும் நிலையில் இருந்து மீண்டு வர,  இதய தெய்வம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் , இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரை போல ஒற்றை தலைமையின் கீழ் கழக நிர்வாகிகளுக்கும் ,கழக தொண்டர்களுக்கும் ,பொதுமக்களுக்கும் உத்வேகம் அளிக்கும் வகையில் அரசியல் வியூகங்களை விரைந்து செயல்படுத்துவதற்கும் ,கழக தலைமை நிலைய செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் , கழக இடைக்கால பொதுச் செயலாளராக பொறுப்பேற்று கழகத்தை வீறு கொண்டு எழுச்சி பெற , புரட்சித்தலைவர் எம்ஜிஆர்,  புரட்சித்தலைவி அம்மா ஆகியோரது வழியில் தலைமை ஏற்று நடத்துமாறு ஒன்றரை கோடி தொண்டர்களின் சார்பில் இப்பொழுது கேட்டுக்கொள்கிறது என்று குறிப்பிட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.