சென்னையில் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

 
parade

சென்னை காமராஜர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. 

நாடு முழுவதும் வருகிற 26ம் தேதி குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. இதேபோல் தமிழ்நாட்டிலும் குடியரசு தின விழாவை சிறப்பாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. வழக்கமாக சென்னையில் மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள காந்தி சிலை அருகே குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் நடைபெறும். தற்போது அந்த இடத்தில் மெட்ரோ ரெயில் பணி நடைபெறுவதால் இந்த ஆண்டு உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளது. 

இந்த நிலையில், காமராஜர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முப்படை, தேசிய மாணவர் படை, காவல் துறை உள்ளிட்ட  துறைகளை சேர்ந்த அணிவகுப்பு நடைபெற்றது. 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் குடியரசு தின விழாவில் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தமிழக அரசின் 20 துறைகளை சார்ந்த அலங்கார ஊர்திகள் குடியரசு தின விழாவில் இடம்பெறுகிறது.