போக்குவரத்து பணியாளர்கள் வாரிசு நியமன விவரத்தை பதிவு செய்ய அறிவுறுத்தல்!!

 
erode bus strike

போக்குவரத்து பணியாளர்கள் வாரிசு நியமன விவரத்தை பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

bus

இதுக்குறித்து மாநகர் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து வரும் அனைத்து பணியாளர்களுக்கும் அவரவர் பணிப்பதிவேட்டில் வாரிசு நியமன விவரம்(NOMINATON) பதிவு செய்திருத்தல் வேண்டும்.

tn

அவ்வாறு இதுவரையில் பதிவு செய்யாமல் இருப்பவர்கள் மருத்துவ அடையாள அட்டையில் "வாரிசு நியமன பெயர்களை" உரிய ஆதார ஆவணங்களுடன் பதிவு செய்து அதனுடைய நகல், திருமண சான்று, குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ், etc., ஆகியனவற்றின் நகல்களை கோரிக்கை மனுவுடன் இணைத்து உரிய அலுவலரிடம் "ஒப்புகை” பெற்று பணிமனை "கிளை மேலாளர்கள்" மூலமாக "துணை மேலாளர்” (பணியாளர் பிரிவு) அவர்களுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.