இன்றும், நாளையும் தமிழ்நாட்டிற்கு ரெட் அலர்ட்!!

 
tn

இன்றும், நாளையும்  தமிழ்நாட்டிற்கு ரெட் அலர்ட்  எச்சரிக்கை விடுத்துள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று தேனி, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் அதி கனமழையும், நீலகிரி, ஈரோடு, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, சிவகங்கை , கரூர், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

rain

நாளை தேனி, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் அதி கனமழையும், நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தனது முன்னறிவிப்பில் தெரிவித்துள்ளது.

rain
இந்நிலையில் இன்றும், நாளையும் அதிக கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் தமிழ்நாட்டிற்கு ரெட் அலர்ட்  எச்சரிக்கை விடுத்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தொடர் கனமழை காரணமாக தேசிய பேரிடர் மீட்புப் படை தயார் நிலையில் உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை எதிரொலியாக  44 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப்படை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.