3 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்.. விரைந்தது பேரிடர் மீட்புப்படை

 
3 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்..  விரைந்தது பேரிடர் மீட்புப்படை

அதிகனமழை பெய்யும் என எச்சரிக்கை  விடுக்கப்பட்டுள்ளதால்,  நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு அரக்கோணம் மையத்தில் இருந்து தலா 2 பேரிடர் மீட்புப்படை குழுக்கள் விரைந்துள்ளன.

தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, கன்னியாகுமரி , நெல்லை மற்றும் தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில், அடுத்த 3 நாட்களுக்கு அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த 3 மாவட்டங்களுக்கும்   வாணிலை ஆய்வு  மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. கூடுதலாக  நாளை  தேனி மாவட்டத்திற்கும் ரெட் அலர்ட்  எச்சரிக்கை விடுத்துள்ளது.  

ரெட் அலெர்ட் : வானிலை ஆய்வு மையம்

அதேபோல், தூத்துக்குடி, சிவகங்கை, திருச்சி, கரூர், நாமக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர் ஆகிய 11 மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. அத்துடன் தமிழகத்தில்  அடுத்த 5 நாட்களுக்கான மழை நீடிக்கும் எனவும், எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும் என்கிற விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளனர்.   

மழை

இந்த நிலையில்  தென்மேற்கு பருவமழை அதிதீவிரமடைந்துள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு  தேசிய மீட்பு படையினர்  விரைந்துள்ளனர்.  அரக்கோணம் மையத்தில் இருந்து தலா 2 பேரிடர் மீட்புப்படை குழுக்கள்  என 4 குழுவினர் சாலை மார்க்கமாக  கன்னியாகுமரி மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு  செல்கின்றனர்.