சிவப்பு எச்சரிக்கை வாபஸ் - மீண்டும் உருவாகும் புதிய காற்றழ்த்த தாழ்வு பகுதி

 
v

தமிழகத்தில் நிர்வாக காரணங்களுக்காக விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது என்று அறிவித்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.  அதே நேரம் தமிழ்நாட்டில் கன மற்றும் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் , தமிழகத்தில் இன்று அதிக கன மழையும் நாளை 13ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

t

 தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருக்கிறது என்றும்,  இதனால் நவம்பர் 16ஆம் தேதி அன்று மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருக்கிறது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து இருக்கிறது.

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியினால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக கனமழை மற்றும் மிக கனமழை பெய்து வருகிறது.  அதிலும் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் நேற்று விடிய விடிய மழை கொட்டி தீர்த்து இருக்கிறது.  இதனால் அம் மாவட்டங்களில் மக்கள் மழையின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது.

கனமழையின் காரணமாக தமிழகத்தில் 27  மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  நேற்று 29 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று 27 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.