காணாமல் போன வாலிபர் அழுகிய நிலையில் சடலமாக மீட்பு

 
b

நான்கு நாட்களுக்கு முன்னர் காணாமல் போன வாலிபர் உடல் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

 சிவகாசி அருகே தாயில்பட்டி.   இப்பகுதியில் இருக்கும் கிராம சேவை மையம் கட்டிடத்தின் உச்சியில் துர்நாற்றம் அடித்திருக்கிறது.   பொதுமக்கள் இதைப்பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வெம்பக்கோட்டை போலீசார் அப்பகுதிக்கு வந்து கிராம சேவை மையக் கட்டிடத்தின் மீது ஏறி சோதனையிட்டபோது கருகிய நிலையில் வாலிபர் சடலம் கிடந்தது.

y

 உடல் கருகிய நிலையில் கிடந்த வாலிபரின் கையில் மோதிரம் அணிந்து இருப்பதை பார்த்த போலீசார்,  அந்த மோதிரத்தை வைத்து  வாலிபர் யார் என்பதை கண்டரிந்தனர்.  அந்த வாலிபர் கோட்டையூர் முனியசாமி என்பவரின் மகன் பாலமுருகன் என்பதும் அவர் கட்டிட தொழிலாளி என்பதும் தெரிய வந்திருக்கிறது. திருமணமான  பாலமுருகனுக்கு தனலட்சுமி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

 பாலமுருகனை கடந்த 4 நாட்களாக காணாமல் உறவினர்கள் பெற்றோர்கள் பல இடங்களில் தேடி வந்த நிலையில்தான் பாலமுருகனை கண்டறிந்துள்ளனர்.  இதயடுத்து பாலமுருகனை கொன்றது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.  போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பாலமுருகன் இரவு நேரத்தில் வீட்டிற்குச் செல்லாமல் கிராம சேவை கட்டிடத்தின் உச்சியில் தூங்குவதற்காக ஏறி இருக்கிறார்.  அப்போது இருளில் உயர் மின்னழுத்த கம்பி சென்றதை அவர் கவனிக்கவில்லை.    எதிர்பாராத விதமாக உடலில் பட்டு மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்து இருக்கிறார் என்பது தெரியவந்திருக்கிறது.

பாலமுருகன் உயிரிழந்து  இரண்டு மூன்று தினங்கள் இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்து இருக்கிறார்கள் .   பாலமுருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் போலீசார்.   இதன் பின்னர் பாலமுருகன் மனைவி தனலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் வெம்பக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.